பாடலையின் ஒழுக்கக் கோவை

shape image

பாடலையின் ஒழுக்கக் கோவை

மட்/ககு/வந்தாறுமூலை  மத்திய மகா வித்தியாலயம் - சித்தாண்டி

கல்குடா  கல்வி  வலய  பாடசாலைகளுக்கான  மாணவர்  ஒழுக்கக்கோவையின் அடிப்படையில் மட்/ககு/வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலய மாணவர்களிடம் காணப்பட வேண்டியதும் பின்பற்ற வேண்டியதுமான முக்கிய ஒழுக்க நெறிகள்:


1.மூத்தோரையும்  பெற்றோரையும் அதிபர் ஆசிரியர்களையும்  மதித்து நடத்தல் அத்தோடு இளையோரை அன்பாகவும் பண்பாகவும்  வழி நடாத்தல்.

2.மாணவன் உரிய முறைப்படி தலை முடி வெட்டி இருத்தல். மாணவி உரிய  முறைப்படி தலைமுடி இழுத்து தலை கட்டி இருத்தல்.

3.கழுத்துப்பட்டி ஒழுங்காகவும் செம்மையாகவும் கட்டி இருத்தல்.

4.ஆண்கள் கறுப்பு சப்பாத்தும் கறுப்பு காலுறையும் பெண்கள் கறுப்பு சப்பாத்தும் வெள்ளை காலுறையும் அணிந்து வருதல்.
5.வித்தியாலயத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மாணவருக்குரிய பண்புடன் நடத்தல்.

6.காலை 7.15 மணிக்கு முன்பாக வித்தியாலயத்திற்கு சமுகமளித்தலும் கற்றல் கற்பித்தல் செயன்முறையை மேற் கொள்ள வகுப்பறையையும் சுற்றாடலையும் தயார்படுத்தல்.

7.மாணவர் வெளிச்செல்லும் தேவை ஏற்படின் வகுப்பாசிரியர் ஊடாக அதிபரின் அனுமதி பெற்றிருத்தல்.

8.மாணவர் தினவரவு எண்பது வீதற்கு(80மூ) மேல் இருத்தல்.

9.எப்போதும் தூய்மையாகவும் சுகாதார முறைக்கேற்பவும் தன்னைப் பராமரித்தல்.

10.அவரவர் சமய கலாசார விழுமியங்களை பின்பற்றுதல்.

11. வகுப்புத்தலைவர்க்கும் மாணர்தலைவர்க்கும் வித்தியாலயத்தின் உள்ளேயும் வெளியேயும்;   மதிப்புடன் கட்டுப்பட்டு நடத்தல் .

12.வித்தியாலயத்தின் சொத்துக்களை எதிர்கால சந்ததியின் தேவை கருதி பாதுகாப்புடன் பராமரித்தல்.

13. வித்தியாலயத்தில்  நடைபெறும் பிரத்தியேக வகுப்புக்களில் கிரமமாக  பங்கு கொள்ளுதல்.

14. வித்தியாலயத்தில் நிகழும் சகல இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் பங்கு கொள்ளல்.

15. வித்தியாலய செயற்பாடுகளில் பங்கு கொள்ள அழைக்கப்படும் போது தவறாது அதில் பங்குபற்றுதல் வேண்டும் .

16. வித்தியாலயத்திற்கு வெளியில் தேவையற்றவர்களுடனான தொடர்புகளை ஏற்படுத்தாது இருத்தல்.

17.பாடசாலையினுள்ளே தேவையற்ற இலத்திரனியல் சாதனங்களை கொண்டு வருதல் கூடாது.

18.தனது நன்மை கருதி வகுப்பறையில் இருந்து கற்பதுடன் வெளியே  அலைந்து திரியாது இருத்தல்.

19. தவணைப்பரீட்சை, பொதுப்பரீட்சை ஆகியவற்றில் உயர்ந்த பெறுபேறுகளை பெறுவதற்கு முயற்சியுடன்    செயற்படுதல்.
20. எவ்வேளையிலும் வித்தியாலயத்தின் இறைமைக்கும் உயர் மதிப்புக்கும் கௌரவத்திற்கும் இழுக்கு ஏற்படா வண்ணம் செயற்படல்.





மேற்படி ஒழுக்க விதிகளை ஏற்று நடப்பேன் என சத்தியம்  செய்வதுடன் மீறி செயற்படும் பட்சத்தில் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு அமைய எடுக்கப்படும் முடிவுகளுக்கு கட்டுப்படுவேன் என உறுதி அளிக்கிறேன்.

மாணவர் ஒப்பம் -.....................................          திகதி - ...............................



எனது மகனை/மகளை வித்தியாலய ஒழுக்க விதிகளுக்கு ஏற்ப நடப்பதற்கு அவருக்குரிய ஆலோசனை  வழிகாட்டலை மேற்கொள்வேன் எனவும் மீறினால் ஒழுக்காற்று சபையின் முடிவுகளை ஏற்றுக்கொள்வேன் எனவும் உறுதி கூறுகிறேன்.

பெற்றோர் ஒப்பம் ........................      திகதி - ..............................
தொலைபேசி இல............................            



எனது வகுப்பில் கற்கும் மாணவன் /மாணவி ......................................................................
என்பவர் மேற்படி ஒழுக்க விதிகளைப் பின்பற்றி நடப்பதற்கு எப்போதும் வழிப்படுத்துவேன்  என்பதை தெரியப்படுத்துகிறேன். 

வகுப்பாசிரியர் பெயர்;  ........................... திகதி-...........................  

வகுப்பாசிரியர் ஒப்பம் ............................ வகுப்பு -............         


அதிபர் ...........................................     திகதி...............................  

Search

Archive

Tags

Popular News

Website

Maintain by : P.Vijayapaskar Designed by S.Akshayan
© Copyright 2024 VMMV.EDU.LK