பாடசாலை கீதம்
பாடசாலை கீதம்
('ஜனகன மன அதிநாயக ஜயஹே பாரத பாக்ய விதாதா'
என்னும் கவிஞர் தாகூரின் பாடல் மெட்டு)
பல்லவி
அனுபல்லவி
செந்தமிழும் ஆங்கிலம் சீர்கலைஞானம்
சேரும் விஞ்ஞானம் தொழில் நுட்பம்
வந்துநம் மாணவர் மனதில் நிறைந்து
வையகம் வாழ்ந்திட வாழி
வாழ்க வாழ்க வாழ்க
வாழிய வாழியவே
சரணம்
அமரர் நல்லையா எனும் அறிவோன்
அருளுடன் விளங்கு வித்தியாலயம்
ஆயிரமாயிரம் ஆண்டுகள் நீண்டு
அருங்கல்வி அளித்திட வளர்க
மலர்ந்து ஒளிர்கெனும் இலக்கினை நோக்கி
மாணவர் மாண்புடன் மலர்க
புலர்ந்தெழு காலைப் பொழுதினைப் போலே
புகழுடன் வித்தியாலம் வாழ்க (வாழ்க)
மாணவர் உடல் நலம் நிறைக
மனவளம் சேர்ந்தவர் வளர்க
வானிலும் உயர்எம் ஆசிரியர்கள்
அதிபரும் நலனொடு வாழ்க
மாணுடை அறிவு பணிவுடன் கல்வி
வளர்க நற்பண்பு வாய்மை ஒழுக்கம்
வளர்க எமக்கெனும் பெற்றோரும்
வாழ்த்த வித்தியாலயம் வாழியவே
வாழ்க வாழ்க வாழ்க
வாழிய வாழியவே.
ஆக்கியோன்.வித்துவான்.வி.சி.கந்தையா